உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை

கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை

அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் டவுன் பஞ்சாயத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 66 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா, நேற்று நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் பாபு முன்னிலை வகித்தார். தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலர் விஜயகுமார், கூடுதல் வகுப்பறை கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாசிநாயக்கன்பட்டியில் மாரியம்மன் கோவில் அருகே, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை பணியை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் செல்வ சூரியா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை