உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம், ஆத்தூர் கோட்டங்களில் 50 இடத்தில் பறவை கணக்கெடுப்பு

சேலம், ஆத்தூர் கோட்டங்களில் 50 இடத்தில் பறவை கணக்கெடுப்பு

சேலம் : சேலம் கோட்டத்தில் சேர்வராயன் தெற்கு உள்பட, 6 வனச்சரகங்களில், 25 இடங்கள்; ஆத்துார் கோட்டத்தில் ஆத்துார் உள்பட, 6 வனச்சரகங்களில், 25 இடங்கள் என, 50 இடங்களில் பறவை கணக்கெடுப்பு பணி நேற்று தொடங்கியது.இதில் வனத்துறையினர், தன்னார்வலர், கல்லுாரி மாணவர் உள்பட, 400 பேர் ஈடுபட்டனர்.அவர்கள் பறவை இனங்களை படம் பிடித்தும், நேரில் பார்த்தும் பதிவு செய்தனர். கணக்கெடுப்பு முடிந்ததும், பறவை இனங்கள் குறித்து பட்டியல் தயாரித்து, சென்னை வனத்துறை தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படும். அப்போது புது பறவை இனங்கள் குறித்தும், எவ்வளவு பறவை இனங்கள் உள்ளன என்பது குறித்தும் தெரிய வரும்.இப்பணி இன்றும் நடக்கிறது என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை