உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தென்னைக்கு பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

தென்னைக்கு பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அழைப்பு

சேலம்: தென்னை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை: சேலம் மாவட்டத்தில், 13,661 ஹெக்-டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர் பாதிப்பு, பூச்சி, நோய் தாக்குதல்களால் தென்னை மரம் உற்பத்தி திறனை இழந்து விவ-சாயிகள் நஷ்டமடைவர். அதனால் விவசாயி-களை காக்க, தமிழகத்தில் தென்னை வாரிய பங்-களிப்புடன் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்-படுகிறது.குறிப்பாக, 4 முதல், 15 வயது வரையுள்ள தென்னை மரத்துக்கு, 225 ரூபாய் பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்து கொண்டால் இழப்பீ-டாக, 900 ரூபாய் வரை கிடைக்கும். 16 முதல், 60 வயது வரையுள்ள மரத்துக்கு, 350 ரூபாய் பிரீ-மியம் செலுத்தி, 1,750 ரூபாய் இழப்பீடு பெற முடியும். அதனால் விவசாயிகள், ஆதார் அட்டை நகல், அடங்கல், நில வரைபடம், வங்கி கணக்கு புத்தக நகல், அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா பெயரில் எடுக்கப்பட்ட வங்கி வரை-வோலை உள்ளிட்ட ஆவணங்களுடன், அவரவர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்-குனர் அலுவலகத்தில் வழங்கப்படும் விண்ணப்-பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ