உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரூ.59 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு

ரூ.59 லட்சம் மோசடி 4 பேர் மீது வழக்கு

சேலம்:சேலம், நரசோதிப்பட்டி, இந்தியன் வங்கி காலனியை சேர்ந்தவர் வெங்கட்ராமன், 46. 'பைபர்' கேபிள் பதிக்கும் ஒப்பந்ததாரர். இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த, சேலத்தை சேர்ந்த கிருஷ்ணன், சின்னதம்பி, விஜயா, தனசேகர் ஆகியோர், வெங்கட்ராமனிடம், சப் - கான்ட்ராக்ட் எடுத்து, கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது கேபிள் பணிக்கு உபகரணங்கள் வாங்கியதாக போலி ரசீது தயாரித்து, 4 பேரும் மோசடியில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து வெங்கட்ராமன், அவரது அலுவலக கணக்கை தணிக்கை செய்ததில், 2022 மே முதல், 2023 வரை, 59.90 லட்சம் ரூபாய் மோசடி நடந்தது தெரியவந்தது. இந்த பணத்தை பலமுறை கேட்டும் திருப்பி தராமல், கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் வெங்கட்ராமன் புகார்படி, சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார், கிருஷ்ணன் உள்பட, 4 பேர் மீது, நம்பிக்கை மோசடி, போலி பில் பயன்படுத்தியது, மோசடி, உடந்தையாக இருத்தல், கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளில் பேசியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிந்து தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ