உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வார்டன் பணிக்கு இடையூறு கொலை கைதி மீது வழக்கு

வார்டன் பணிக்கு இடையூறு கொலை கைதி மீது வழக்கு

சேலம், நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை சேர்ந்த கனகராஜ் மகன் வல்லரசு, 26. இவர், வாழப்பாடி அருகே பெண்ணை கொன்ற வழக்கில் கடந்த பிப்.,3ல், கைது செய்யப்பட்டு, சேலம் மத்தியசிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த, 6 மாலை, 4:00 மணியளவில், சிறை அறைக்குள் இருந்து வெளியே வந்த வல்லரசு, திருநங்கை அடைக்கப்பட்டிருந்த அறையை கடந்து சென்றுள்ளார்.அப்போது பணியில் இருந்த வார்டன் செந்தில்குமார், 47, திருநங்கை அடைக்கப்பட்டிருக்கும் அறை வழியாக செல்லக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார். அதை ஏற்காத அவர், வாக்குவாதம் செய்து தாக்கியுள்ளார். செந்தில்குமார் புகார்படி, போலீசார், வல்லரசு மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை