சேலம்: சேலம், 2ம் அக்ரஹாரத்தில், இந்து சமய அறநி-லையத்துறை நிர்வாகத்தில் லட்சுமி நாராயண சுவாமி கோவில் உள்ளது. அதன் நுழைவாயில் ராஜகோபுர கருங்கல் சுவரில் உள்ள சங்கு சிற்ப கீழ் பகுதியில், முதல்வர், அமைச்சர், அறங்காவ-லர்கள் பெயருடன், 3 அடிக்கு, 3 அடியில் சதுர கல்வெட்டு பதிக்க, 'டிரில்லிங்' இயந்திரம் மூலம், பழமையான கருங்கல் சுவரை வெட்டி எடுத்துள்-ளனர். இதை அறிந்து, அங்கு வந்த, சேலம் திருத்-தொண்டர் பேரவை தலைவர் ராதாகிருஷ்ணன், பா.ஜ.,வின் சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத், மாநகர தலைவர் சசிகுமார், இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் சந்தோஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், சுவரை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை தடுத்து நிறுத்தி, 'இதை செய்ய யார் அனுமதி அளித்தனர்' என கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர்கள், 'அறங்காவலர் குழுவினர் தான் வெட்டி எடுக்க சொன்னார்கள்' என தெரிவித்தனர். உடனே, டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்-தனர். தொடர்ந்து அவர்கள் வந்ததும், இரு தொழி-லாளர்களை ஒப்படைத்தனர். பின், 'ராஜகோபுர கருங்கல் சுவரை வெட்டி எடுத்தவர்கள், அதை செய்ய சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசில் புகார் செய்தனர்.