உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பயிர் சுழற்சி முறையில் கேழ்வரகு பயிரிட்டால் அதிக மகசூல் பெறலாம்

பயிர் சுழற்சி முறையில் கேழ்வரகு பயிரிட்டால் அதிக மகசூல் பெறலாம்

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் வேளாண் பயிர்களான சிறுதானியம், பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் சித்திரை பட்டத்தில், குறைந்த நீர் தேவையில் கேழ்வரகு சாகுபடி செய்ய, வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கின்றனர்.இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறியதாவது: கேழ்வரகு எல்லா வகை மண்களிலும் பயிர் செய்யலாம். செம்மண், மணற்பாங்கான கருமண் நிலம் ஏற்றது. ஒரு ஹெக்டேருக்கு, 5 கிலோ விதை போதுமானது. அந்த விதைகளை, 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா கலந்து, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். நிலத்தில் நேரடியாக இடுவதாக இருந்தால், 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா, 25 கிலோ மணலுடன் கலந்து துாவ வேண்டும்.ஒரு ஹெக்டேருக்கு, 12.5 கிலோ நுண்ணுாட்ட சத்து இடவேண்டும். விதைத்தவுடன், 4வது நாள் மற்றும் 7 முதல், 10 நாட்களுக்குள் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். மண் வளத்தை பாதுகாக்க பச்சைப்பயறு, உளுந்து, துவரை அல்லது கடலை ஆகிய ஏதேனும் ஒரு பயிருடன் பயிர் சுழற்சி முறையில் கேழ்வரகு பயிரிட்டு, அதிக விளைச்சல் பெறலாம். பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் கேழ்வரகு விதை, உயிர் உரம், சிறுதானியம் நுண்ணுாட்டம் ஆகியவை கிடைக்கும். விபரங்களுக்கு, 98425 43215 என்ற எண்ணிலும், உதவி வேளாண் அலுவலர்கள், 'அட்மா' திட்ட அலுவலர்களை அணுகலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி