உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தாயை கைது செய்யாதீங்க: மகள் தற்கொலை முயற்சி

தாயை கைது செய்யாதீங்க: மகள் தற்கொலை முயற்சி

ஆத்துார்: சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, ராமநாயக்கன்பாளையத்தில், மதுபாட்டில் விற்பனை செய்த சங்கீதா, 40, என்பவரை, ஆத்துார் ஊரக போலீஸ் ஏட்டுகள் மோனிஷா, சுகுணா ஆகியோர் பிடித்தபோது, அவர்களை கீழே தள்ளிவிட்டு சங்கீதா ஓடினார். அவரை விரட்டிப்பிடித்து,கைது செய்தனர்.அப்போது, தாய் சங்கீதாவை கைது செய்யக் கூடாது என, அவரது மகளான, கல்லுாரி மாணவி சுஜாதா, 20, தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு, தற்கொலைக்கு முயன்றார். அவரை, போலீசார், பொதுமக்கள் மீட்டனர். ஆத்துார் போலீசார், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை