உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / காங்., செயலாளர் நீக்கம் மாவட்ட தலைவர் தகவல்

காங்., செயலாளர் நீக்கம் மாவட்ட தலைவர் தகவல்

சேலம்: காங்கிரஸ் கட்சியில் இருந்து, செயலாளர் சுசீந்திரகுமார் நீக்கப்பட்டுள்ளதாக சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோபால் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக காங்கிரஸ் தலைவராக தங்கபாலுவே தொடர்ந்து நீடிக்கிறார். அவரின் உத்தரவின் பெயரில்தான் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சுசீந்திரகுமார் என்பவர் எந்த பொறுப்பிலும் இல்லை. இந்நிலையில், அவர் செப்டம்பர் 3ம் தேதி வெளியிட்டுள்ள செய்தி, காங்கிரஸ் கட்சியின் எந்த ஒரு தொண்டரையும் கட்டுப்படுத்தாது. செய்தி வெளியிட்ட அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிடுகிறேன். இவரோடு கட்சியினர் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை