உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மார்க்கெட்டில் தனிநபர் ராஜ்யம் தி.மு.க.,வினர் சரமாரி குற்றச்சாட்டு

மார்க்கெட்டில் தனிநபர் ராஜ்யம் தி.மு.க.,வினர் சரமாரி குற்றச்சாட்டு

பவுமிகா தப்சிரா(தி.மு.க.,): சேலம் ஆற்றோர மார்க்கெட், கீழ் மார்க்கெட் பகு-தியில் சாலையோரத்தில் கடை வைக்க, இடம் ஒதுக்கி தனி நபர் ஒருவர் தலா, 15,000 முதல், 30,000 ரூபாய் வரை வசூலிக்கிறார். அதுவும் வெளியூர் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்குவதால் உள்ளூர் வியாபாரிகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. வ.உ.சி., பூ மார்க்கெட்டில் தினமும், 5 பேர் பணம் வசூலிப்பது பற்றி கேட்டால் அதிகாரிகள் தெரியாது என்கின்றனர். அதிகாரிகள் துணையோடு, இந்த அத்துமீறல் நடக்கிறது.இமயவர்மன்(வி.சி.,): வெளியூர் வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கக்-கூடாது. ஒரு அமைப்பின் பெயரில், ஷானவாஸ் என்ற தனிநபர் எப்படி கடை ஒதுக்கலாம். அவர் வழங்கிய கடை அனுமதியை ரத்து செய்து புதிதாக வழங்க வேண்டும். சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து, அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாந்தமூர்த்தி(தி.மு.க.,): தனிநபருக்கு அதிகாரம் தரக்கூடாது. அவர் பணம் வசூலிப்பது பற்றி, பா.ம.க., தரப்பில் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.அதை ஆமோதித்து பெரும்பாலான கவுன்சிலர்கள், ஷானவா-ஸூக்கு எதிராக குரல் கொடுத்ததால், சலசலப்பு உண்டானது.மேயர் ராமச்சந்திரன்: போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும். இதையேற்று கவுன்சிலர்கள் அமைதியாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை