உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெங்களூருவை சேர்ந்த முதியவர் தற்கொலை

பெங்களூருவை சேர்ந்த முதியவர் தற்கொலை

சேலம், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் பாஸ்கர், 51. இவர் நேற்று முன்தினம், சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினார். அன்று இரவு, பாஸ்கருக்கு, அவரது மனைவி தொடர்பு கொண்டபோது, பாஸ்கர் போனை எடுக்கவில்லை. இதுகுறித்து அவர், விடுதி ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார். ஊழியர்கள், பாஸ்கர் அறைக்கு சென்றபோது கதவு உள்ளே தாழிடப்பட்டிருந்ததால் திறக்க முடியவில்லை. உடைத்து உள்ளே சென்றபோது, கழிப்பறையில் துாக்கு மாட்டி, பாஸ்கர் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. டவுன் போலீசார் உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர். இருப்பினும் அவரது மனைவி வந்த பின்தான், எதற்காக இறந்தார் என்பதற்கான காரணம் தெரிய வரும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை