உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகை

விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ., சார்பில் உதவித்தொகை

சேலம்: இ.எஸ்.ஐ., காப்பீட்டாளர்களுக்கு, தொழில்சார் நோய் அல்லது வேலை காரணமாக, உயிரிழப்பு ஏற்படும்போது, காப்பீட்டாளர் ஊதியத்தில், 90 சதவீதம் உதவித்தொகையாக, இறந்தவரின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது. அதன்படி மேச்சேரி ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்-றிய தினேஷ் ஆறுமுகம் என்பவர், பணிக்கு செல்லும்போது ஏற்பட்ட விபத்தில், 2024 மே, 22ல் பலியானார்.அவரது குடும்பத்துக்கு உதவித்தொகையாக மாதம், 6,237 ரூபாய் வழங்க, இ.எஸ்.ஐ., சேலம் துணை மண்டல அலுவலக இயக்-குனர் சிவராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதனால் காப்பீட்-டாளர் பணிபுரிந்த அலுவலக வளாகத்தில், இ.எஸ்.ஐ., கிளை அலுவலக மேலாளர் அருண் பாலாஜி, உதவித் தொகையை, குடும்பத்தினருக்கு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை