உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 3,000க்கும் மேற்பட்டோரிடம் முதலீடு பெற்று ரூ.98 கோடி மோசடி வின்ஸ்டார் சிவக்குமாரை கைது செய்ய கோரி உண்ணாவிரதம்

3,000க்கும் மேற்பட்டோரிடம் முதலீடு பெற்று ரூ.98 கோடி மோசடி வின்ஸ்டார் சிவக்குமாரை கைது செய்ய கோரி உண்ணாவிரதம்

சேலம்,ரூ.98 கோடி மோசடியில் ஈடுபட்ட, வின்ஸ்டார் சிவக்குமாரை கைது செய்ய கோரி, பாதிக்கப்பட்டவர்கள் சேலத்தில் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கியுள்ளனர்.சேலத்தை மையமாக வைத்து, 2016ல் தொடங்கப்பட்ட, 'வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ்' நிறுவனம் சார்பில், 3,000க்கும் மேற்பட்டோரிடம் முதலீடு பெற்று, கோடிக்கணக்கில் பண மோசடி நடந்தது. இது தொடர்பாக நிறுவன உரிமையாளர், சேலம் பெரியபுதுாரை சேர்ந்த சிவக்குமார்,58, மற்றும் மேலாளர்கள், 29 பேர் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.௫ நாள் போராட்டம்பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தருவதாக கூறி, முன்ஜாமின் பெற்ற சிவக்குமார், பணத்தை வழங்கவில்லை. அதனால் அவரது முன் ஜாமின் மனுவை கடந்த, 12ல் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகும், சிவக்குமார் கைது செய்யப்படவில்லை. அதை கண்டித்து, நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்கம் சார்பில், சிவக்குமார் மற்றும் கூட்டாளிகளை கைது செய்யக்கோரி, சேலத்தில், 5 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று துவங்கியது. கோட்டை மைதானத்தில் நடந்த உண்ணாவிரதத்துக்கு சங்க செயலர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். இ.கம்யூ., மாவட்ட செயலர் மோகன் பேசுகையில், ''முதலீடு பணத்தில் வாங்கி குவித்த சொத்துகளின் மதிப்பு, 10 ஆண்டில் பல கோடிகளை தாண்டிவிட்டது. அவர் சொன்னபடி யாருக்கும் பணத்தை திருப்பி தரவில்லை. எனவே, அவர் உள்பட கூட்டாளிகள், 29 பேரை உடனடியாக கைது செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் அல்லது அதற்கு ஈடான வீட்டுமனைகளை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் ஈரோட்டில் எஸ்.ஆர்.எம்., பில்டர்ஸ் பெயரில் நிறுவனம் தொடங்கி, பழையபடி மோசடியில் ஈடுபட்டுள்ளார். அந்நிறுவனத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்,'' என்றார்.குற்றப்பத்திரிகைஇது குறித்து, சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: வின் ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ், சவுபாக்கியா சிட்டி டெவலப்பர்ஸ் என இரு நிறுவனங்கள் பெயரில், இரட்டிப்பு தொகை, வீட்டுமனை மற்றும் பாக்குதட்டு மெஷின் வழங்குதல் பெயரில் மொத்தம், 98 கோடி ரூபாய் மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை, 2,106 பேரிடம் புகார் மனு பெற்று, வழக்குபதிந்து இருமுறை குற்றப்பத்திரிகை தாக்கல் நடந்துள்ளது. 70 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளோம். அதில் சிவக்குமார், 29 மேலாளர்கள் உட்பட, 31 பேர் குற்றவாளிகள். இன்னமும் தொடர்ந்து புகார் வருகிறது. 400 மனுக்கள் சேர்ந்ததும், மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். வங்கியில் சிவக்குமார் பெயரில் இருந்த, 20 லட்ச ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.கமிட்டி விசாரணைதவிர, கொண்டலாம்பட்டி, வைகுந்தம், காளிகவுண்டம்பட்டியில் வீட்டுமனைகள், பாகல்பட்டியில் ஒரு வீடு கையகப்படுத்தப்பட்டுள்ளன. அதன் மொத்த மதிப்பு, 2 கோடி ரூபாய். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க, கடந்த ஜூன், 25ல், உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி குமாரசரவணன் தலைமையில் கமிட்டி அமைத்து, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சேலம் கலெக்டர் அலுவலக அறை எண்-202ல் விசாரணை நடந்து வருகிறது. அதே நேரம், கோவை டான்பிட் நீதிமன்ற உத்தரவு பெற்று, சிவக்குமாரை எந்த நேரத்திலும் கைது செய்ய தயாராக இருக்கிறோம். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை