மேலும் செய்திகள்
பெங்களூரு வழித்தட ரயில்களில் மாற்றம்
3 hour(s) ago
சேலம்-ஈரோடு மெமு ரல் சேவை நேற்று துவங்கியது
3 hour(s) ago
. அடிப்படை வசதி கேட்டு கத்தேரியில் மறியல் போராட்டம்
4 hour(s) ago
கடையின் பூட்டை உடைத்து கவரிங் நகை திருட்டு
4 hour(s) ago
சேலம்: சேலத்தை மையமாக வைத்து, 2016ல் துவங்கப்பட்ட, 'வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ்' என்ற நிறுவனம் சார்பில், 3,000க்கும் மேற்பட்டோரிடம் முதலீடு பெற்று, கோடிக்கணக்கில் பண மோசடி நடந்தது. நிறுவன உரிமையாளர், சேலம் பெரியபுதுாரை சேர்ந்த சிவகுமார், 58, மற்றும் மேலாளர்கள், 29 பேர் மீது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்கு, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தருவதாக கூறி, முன்ஜாமின் பெற்ற சிவகுமார், பணத்தை வழங்கவில்லை. அதனால் அவரது முன்ஜாமின் மனுவை, கடந்த, 12ல் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பிறகும், சிவகுமார் கைது செய்யப்படவில்லை. அதை கண்டித்து, பாதிக்கப்பட்டவர்கள் நலச்சங்கம் சார்பில், சிவகுமார் மற்றும் கூட்டாளிகளை கைது செய்யக்கோரி, சேலத்தில், 5 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று துவங்கியது.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago