உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அஞ்சல் தொடர்பான குறைகளை அனுப்பலாம்

அஞ்சல் தொடர்பான குறைகளை அனுப்பலாம்

சேலம்: சேலம் கிழக்கு கோட்ட அளவில் நடத்தப்படும் மக்கள் குறைதீர் முகாம், வரும், 21 மதியம், 12:00 மணிக்கு, முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம், சேலம் தலைமை அஞ்சலக கட்டட, 3ம் தளத்தில் நடக்க உள்ளது. அதனால் அஞ்சல் தொடர்பான குறைகளை, அன்று நேரிலோ அல்லது 'முதுநிலை கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம், சேலம்' என்ற முகவரிக்கு வரும், 18க்குள் அனுப்ப வேண்டும். அஞ்சல் உறை மீது, 'டக் அதாலத் கேஸ்' என எழுத வேண்டும். மணியார்டர், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகார்கள் எனில் அனுப்பிய தேதி, முழு முகவரி, பதிவு அஞ்சல் எண், அலுவலக பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றி புகார்களுக்கு கணக்கு எண், பாலிசி எண், வைப்பு தொகையாளரின் பெயர், வசூலிக்கப்பட்ட விபரங்கள், குறிப்புகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். இத்தகவலை, சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ