உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 70 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்

70 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்

ராஜ்கோட் : ''கடந்த, 60 முதல் 70 ஆண்டுகளில் நடந்ததை விட பலமடங்கு வேகமான வளர்ச்சி திட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். குஜராத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அம்மாநிலத்தின் ராஜ்கோட், பஞ்சாபின் பதிந்தா உ.பி.,யின் ரேபரேலி, மேற்கு வங்கத்தின் கல்யாணி, ஆந்திராவின் மங்களகிரி ஆகிய இடங்களில் ஐந்து எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் திறந்து வைத்தார். மேலும், 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 11,500 கோடி ரூபாய் மதிப்பிலான 200 சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் உட்பட, நாடு முழுவதும் 48,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் துவங்கி வைத்தார்.அப்போது பிரதமர் பேசியதாவது: மற்றவர்கள் மீதான நம்பிக்கை முடிவடையும் இடத்தில் தான், மோடியின் உத்தரவாதம் துவங்குகிறது. நாடு சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்த நேரத்தில், ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை தான் நாட்டில் இருந்தது. அதுவும் டில்லியில் மட்டும் தான் இருந்தது.சுதந்திரம் பெற்ற 70 ஆண்டுகளில், ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டன. அதுவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஆனால், கடந்த 10 நாட்களில் ஏழு புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் மக்களுக்கு கிடைத்துள்ளன. இவற்றில் சில திறக்கப்பட்டும், சில அடிக்கல் நாட்டப்பட்டும் உள்ளன. எனவேதான், கடந்த 60 முதல் 70 ஆண்டுகளில் நம் நாடு கண்ட வளர்ச்சியை விட, பல மடங்கு வேகமான வளர்ச்சி திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டு வருகின்றன.நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படும் என்ற எங்கள் உத்தரவாதத்தை நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 10 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை