உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கைவினை பொருட்கள் கண்காட்சி

கைவினை பொருட்கள் கண்காட்சி

சேலம்: கைவினை கலைஞர்களின் திறமை, பாரம்பரி-யத்தை நினைவு கூறும்படி, டிச., 8 முதல், 14 வரை, தேசிய கைவினை பொருட்கள் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதை ஒட்டி சேலம், திருவள்ளுவர் சிலை அருகே உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் சிறப்பு கைவினைப்-பொருட்கள் கண்காட்சி, விற்பனையை, தேசிய கைவினை பொருட்கள் அபிவிருத்தி ஆணைய உதவி இயக்குனர் நீத்தா, நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். அதில் கைவினை கலைஞர்களால் உருவாக்கப்-பட்ட பஞ்சலோக சிலைகள், பித்தளை விளக்-குகள், மரச்சிற்பங்கள், தஞ்சாவூர் கலைத்தட்-டுகள், ஓவியங்கள், பித்தளை சிலைகள், காகித கூழ் பொம்மைகள், வெள்ளை, கருப்பு உலோக சிலைகள், சுடுமண் சிற்பங்கள், அலங்கார பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை, தேசிய விருது பெற்ற, சேலத்தை சேர்ந்த ஸ்தபதி ராஜா, மாநில விருது பெற்ற கைவினை கலைஞர் சண்முகம் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். வரும், 14 வரை, காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சி நடக்கும் என, அதன் மேலாளர் நரேந்திர போஸ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ