மேலும் செய்திகள்
மாசு கட்டுப்பாடு தின விழா
22 hour(s) ago
சுகவனேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிேஷகம்
22 hour(s) ago
உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கைது
22 hour(s) ago
கூ.நடுநிலை அலுவலர் சங்க மாநில நிர்வாகிகள் தேர்வு
22 hour(s) ago
சேலம்: டியூஷன் ஆசிரியை கொலை வழக்கில், தனியார் மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி கைது செய்யப்பட்டார். சேலம், அஸ்தம்பட்டியை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ஆறுமுகம், 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மனைவி பத்மா, 60. தம்பதியின் மகள்கள் ஜெயா, 32, பாரதி, 30. இதில், ஜெயாவுக்கு திருமணமான நிலையில், பாரதி திருமணம் செய்து கொள்ளாமல் தாயுடன் வசித்தார். அத்துடன், சங்கர் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து, பாரதி டியூஷன் நடத்தினார். இவருக்கும், சேலம், சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தனியார் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய உதயசரண், 45, என்பவருக்கும் ஓராண்டாக பழக்கம் இருந்தது. உதயசரணுக்கு திருமணமாகி மனைவி, இரு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் பாரதிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறி, அவர் பணிபுரியும் மருத்துவமனைக்கு உதயசரண் அழைத்துச் சென்றார். ஆனால், அவர் இறந்துவிட்டது தெரிய வந்தது. பத்மா புகாரின்படி, உதயசரணை கைது செய்து, அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்தனர். போலீசார் கூறுகையில், 'நேற்று முன்தினம் இரவு, சங்கர் நகரில் அறையில் இருவரும் இருந்தபோது, பாரதி தன்னை திருமணம் செய்யும்படி உதயசரணுக்கு நெருக்கடி தந்துள்ளார். இது தொடர்பாக, இருவருக்கும் வாக்குவா தம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த உதயசரண், பாரதியை அடித்து, முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்' என்றனர்.
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago