உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கிணற்றில் குதித்து கணவர் தற்கொலை; காப்பாற்ற குதித்த மனைவி படுகாயம்

கிணற்றில் குதித்து கணவர் தற்கொலை; காப்பாற்ற குதித்த மனைவி படுகாயம்

தலைவாசல் : விவசாய கிணற்றில் குதித்து கணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரை காப்பாற்ற குதித்த, மனைவி படுகாயம் அடைந்தார்.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஊனத்துார் ஊராட்சி ஏரிக்காட்டை சேர்ந்த, விவசாயி செல்வகுமார், 32. இவரது மனைவி திலகவதி, 27. இவர்களது மகள்கள் தினிஷா, 7, செல்வஸ்ரீ, 5, மகன் போத்தி, 2. செல்வகுமார் தினமும் மது அருந்திவிட்டு வந்ததால், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்றும் மது அருந்திவிட்டு வந்த கணவரை, மனைவி தட்டிக்கேட்டார். இதில் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த செல்வகுமார், 90 அடி ஆழமுள்ள, 30 அடியில் தண்ணீர் உள்ள, அவரது விவசாய கிணற்றிலேயே குதித்தார். சில நிமிடத்தில், கணவரை காப்பாற்ற, திலகவதியும் குதித்தார்.இதை பார்த்து, அப்பகுதி மக்கள், தம்பதியை மீட்க முயன்றனர். அதில் திலகவதியை மீட்டனர். செல்வகுமாரை மீட்க முடியவில்லை. காலை, 8:00 மணிக்கு, ஆத்துார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். 8:40க்கு, தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் வீரர்கள் வந்து, ஒன்றரை மணி நேரத்துக்கு பின் செல்வகுமார் இறந்த நிலையில், அவரது சடலத்தை மீட்டனர். அதேநேரம் திலகவதி காயம் அடைந்திருந்ததால், ஆம்புலன்ஸ் மூலம் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி