உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சிறுவன் கடத்தல்: முட்புதரில் மீட்பு

சிறுவன் கடத்தல்: முட்புதரில் மீட்பு

தலைவாசல்: தலைவாசல், திட்டச்சேரியை சேர்ந்த, 8 வயது சிறுவன், 2ம் வகுப்பு படிக்கிறான். அவனை மர்ம நபர்கள் கடத்தியதாக, அவரது தாய் நேற்று அளித்த புகார்படி வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: நேற்று முன்தினம் பெற்றோர் கூலி வேலைக்கு சென்றனர். மாணவர், பாட்டி உதவியுடன், பள்ளிக்கு புறப்பட தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த இருவர், சிறுவன் வாயில் துணியை வைத்து கை, கால்களை கட்டி துாக்கிச்சென்றனர். திட்டச்சேரி ஏரிக்கு சென்றபோது, அங்கு துக்க நிகழ்ச்சிக்கு சடங்குகள் செய்து கொண்டிருந்தவர்களை பார்த்த மர்ம நபர்கள், சிறுவனை அங்குள்ள முட்புதரில் வீசிவிட்டு தப்பினர். அப்போது ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி, சிறுவனை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தார். இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் கூறுகையில், 'கேமராவை ஆய்வு செய்து ஊருக்குள் வந்த கார் குறித்து தனிப் படையினர் விசாரிக்கின்றனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ