உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அதிகாரியாக நடித்து பணம் பறிப்பு வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்

அதிகாரியாக நடித்து பணம் பறிப்பு வாலிபர் மீது பாய்ந்தது குண்டாஸ்

இடைப்பாடி: இடைப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி, சின்ன தாண்டவனுாரை சேர்ந்தவர் குமார், 44. இடைப்பாடி - ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் உள்ள அம்மன் கோவில் பகுதியில் மளிகை கடை நடத்துகிறார். அங்கு கடந்த ஆண்டு அக்., 10ல் வந்த மர்ம நபர், சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எனக்கூறி சோதனை செய்தார்.தொடர்ந்து, 'புகையிலை பொருட்கள் விற்பதால் கடைக்கு, 'சீல்' வைக்க வேண்டும். இதை தவிர்க்க, 50,000 ரூபாய் வேண்டும்' என கேட்டுள்ளார். சந்தேகம் அடைந்த குமார், போலீசாருக்கு போன் செய்ய முயன்றார். அப்போது, குளிர்பான பாட்டிலை எடுத்து உடைத்து, 'போலீசை அழைத்தால் குத்தி விடுவேன்' என மிரட்டினார். இதனால் குமார், கல்லாவில் இருந்த, 21,500 ரூபாயை கொடுக்க, மர்ம நபர் பெற்றுச்சென்றார். பின் குமார் புகார்படி, இடைப்பாடி போலீசார் விசாரித்து, பள்ளிப்பாளையம், முருகன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன், 36, என்பவரை கைது செய்தனர்.இவர் மீது சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், 13 வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிந்தது. இதனால், எஸ்.பி., அருண்கபிலன் பரிந்துரைப்படி, சேலம் கலெக்டர் கார்மேகம், குண்டர் தடுப்பு சட்டத்தில் மணிகண்டனை கைது செய்ய உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறையில் ஓராண்டுக்கு அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை