உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு நிழற்கூடங்கள் அவசரமாக திறப்பு

லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு நிழற்கூடங்கள் அவசரமாக திறப்பு

பெத்தநாயக்கன்பாளையம்: சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவில் பகுதியில் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி மேம்பாட்டு நிதியில் நிழற்கூடம் கட்ட, எம்.பி., கவுதமசிகாமணி, 30 லட்சம் ரூபாய் ஒதுக்கினார். தொடர்ந்து அந்த நிழற்கூட கட்டுமானப்பணி விறுவிறுப்பாக நடந்தது. நேற்று லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என தகவல் வந்தது.இந்நிலையில் அந்த நிழற்கூடத்தை, நேற்று காலை, 10:00 மணிக்கு, தி.மு.க.,வை சேர்ந்த, ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்து தலைவர் அன்பழகன் திறந்து வைத்தார். அதேபோல் ஆத்துார் அருகே ராமநாயக்கன்பாளையத்தில், ஆத்துார் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதி, 9.98 லட்சம் ரூபாயில், நிழற்கூடம் கட்டப்பட்டிருந்தது.அந்த நிழற்கூடத்தை நேற்று, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் திறந்து வைத்தார். ஒன்றிய கவுன்சிலர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி