| ADDED : ஆக 23, 2024 05:08 AM
ஆத்துார்: சேலம் மாவட்டம் நரசிங்கபுரம், பெரியார் தெருவை சேர்ந்த குமார் மகன் தீனா, 22. மேளம் அடிக்கும் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் கந்தசாமிபுதுார் தேர் திருவிழாவுக்கு பணிக்கு சென்றார். இரவு நடன நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, 'டியோ' மொபட்டில் புறப்பட்டார். நண்பரான, கடம்பூரை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் அஜய், 18, உடன் வந்தார். இரவு, 10:30 மணிக்கு மோட்டூர் பஸ் ஸ்டாப் வந்-தபோது எதிரே வந்த, 'ஸ்விப்ட்' கார், மொபட் மீது மோதியது. இதில் தீனா உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அஜய், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மல்லியக்-கரை போலீசார், காரை விட்டு தப்பியோடிய டிரைவரை தேடுகின்-றனர்.