உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சாலை பணி குறித்து பதில் அளிக்க மறுப்பு வனத்துறை மீது எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

சாலை பணி குறித்து பதில் அளிக்க மறுப்பு வனத்துறை மீது எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு

ஆத்துார்: வனத்துறை மூலம் அமைக்கப்படும் சாலையை, எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய குழு அமைத்து, கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்ய வேண்டும். இதுகுறித்து நரசிங்கபுரத்தில் நேற்று, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் தொகுதி, எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், நிருபர்களிடம் கூறியதாவது:சேலம், ஆத்துார் மாவட்ட வனக்கோட்டங்களில் ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு ஆகிய சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் உள்ள மலை கிராமங்களுக்கு தற்போது, 10 கோடி ரூபாயில், பாலம் வசதியுடன் தார்ச்சாலை அமைக்கப்படுகிறது. இதுகுறித்து வன அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்க மறுக்கின்றனர். சாலை எந்த இடத்தில் போடுகின்றனர் என்ற விபரம் தெரிவிப்பதில்லை. ஒப்பந்ததாரர்கள், அமைச்சர்களுக்கு, 40 சதவீத கமிஷன் கொடுத்து பணி மேற்கொள்வதாக கூறுகின்றனர்.அதனால் வனத்துறை மூலம் அமைக்கப்படும் சாலையை, எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய குழு அமைத்து, கலெக்டர் பிருந்தாதேவி ஆய்வு செய்ய வேண்டும். இல்லை எனில் மாவட்ட வன அலுவலகங்கள் முன், போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி