உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டுவிரியனுடன் மொபட்டை ஓட்டி வந்த நாகராஜன்

கட்டுவிரியனுடன் மொபட்டை ஓட்டி வந்த நாகராஜன்

'ஆத்துார்: ஆத்துார், உடையார்பாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவர் நேற்று மாலை, 5:30 மணிக்கு, வீட்டில் இருந்து, 'ஸ்கூட்டி - பெப்ட்' மொபட்டில் அருகே உள்ள டீக்கடைக்கு வந்தார்.தொடர்ந்து அங்குள்ள கே.வி.பி., வங்கி எதிரே, மொப்டை நிறுத்-திவிட்டு இறங்கினார். அப்போது, சீட்டின் அடிப்பகுதியில் ஏதோ நீண்டிருந்ததை பார்த்தார். பின் பாம்பு என்பதை உணர்ந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து அவர் தகவல்படி, ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, மொபட் சீட்டின் அடிப்பகுதியில் இருந்த, கொடிய விஷத்தன்மை கொண்ட கட்டுவிரியன் பாம்பை, உபக-ரண உதவியுடன் உயிருடன் பிடித்தனர். பின் ஆத்துார் வனத்து-றையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை