உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தடுமாறி கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு

தடுமாறி கீழே விழுந்த முதியவர் உயிரிழப்பு

சேலம் : சேலம் கொண்டலாம்பட்டி அருகே, நிலைதடுமாறி கீழே விழுந்த முதியவர் உயிரிழந்தார்.சேலம், பெரிய கொண்டலாம்பட்டி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து, 70. இவர் கடந்த, 4ம் தேதி புத்துார் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். கொண்டலாம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ