உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேர்ச்சி பெறாதோருக்கு சிறப்பு வகுப்பை ஒத்திவைக்க உத்தரவு

தேர்ச்சி பெறாதோருக்கு சிறப்பு வகுப்பை ஒத்திவைக்க உத்தரவு

சேலம் : தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து, 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி, தேர்ச்சி பெறாத மாணவர்கள், உயர்கல்வியை தொடர முடியாத சூழல் உள்ளது. இவர்கள் அனைவரையும் ஜூனில் நடக்கும் சிறப்பு துணைத்தேர்வில் பங்கேற்க செய்ய, பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.அதன்படி சேலம் மாவட்டத்தில், தேர்வு முடிவு வெளியான சில நாட்களில் அரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் ஜூன், 6ல் பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால் நேற்று முதல், பள்ளி திறப்பதற்கான முன்னேற்பாடு பணியை மேற்கொள்ள, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து சிறப்பு வகுப்புகளை, பள்ளி திறக்கும் வரை ஒத்திவைக்கவும், மாணவர்கள் வீட்டிலேயே படிப்பை தொடர அறிவுறுத்தவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் பள்ளிகள், 10ம் தேதி திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை