உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஜல்லி கொட்டி 7 மாதங்களாகியும் சாலை போடாததால் மக்கள் மறியல்

ஜல்லி கொட்டி 7 மாதங்களாகியும் சாலை போடாததால் மக்கள் மறியல்

தாரமங்கலம்: தாரமங்கலம், அழகுசமுத்திரம் ஊராட்சியில் ஏரிக்கோடி முதல் சஞ்ஜிராயன் கோவில் வரை, 1.5 கி.மீ.,க்கு தார்ச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு தமிழக முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில், 37 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. தொடந்து பணி தொடங்கி ஜல்லி கற்கள் போடப்பட்டன. ஆனால், 7 மாதங்களாகியும் தார் ஊற்றப்படவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று காலை, 10:30 மணிக்கு அழகுசமுத்திரம் பஸ் ஸ்டாப் அருகே, முட்செடிகளை சாலையில் போட்டு அடைத்து மறியலில் ஈடுபட்டனர். தாரமங்கலம் போலீசார், பேச்சு நடத்தினர்.அப்போது மக்கள் கூறுகையில், 'ஜல்லி கற்கள் போட்டு, 7 மாதங்களாகியும் தார் ஊற்றவில்லை. சாலையில் ஜல்லியும் பெயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்' என்றனர். 'இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் கூற, மக்கள் மறியலை கைவிட்டனர். இச்சம்பவத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே அந்த வழியாக வந்த, ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை