| ADDED : மே 08, 2024 04:46 AM
ஆத்துார் : ஆத்துார் அருகே மல்லியக்கரை, வண்ணாத்திக்குட்டையை சேர்ந்த, விவசாயி நடேசன், 65. இவருக்கு கால் முறிவு ஏற்பட்டதால், இரு நாட்களுக்கு முன், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு வீட்டுக்கு வந்தார். அப்போது பூட்டியிருந்த வீட்டில், மின்விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் அதே பகுதியைச் சேர்ந்த மணி, 40, என்பவரை அழைத்து, வீட்டில் பார்க்கும்படி நடேசன் கூறினார்.மணி, அவரது மகன் நவீனுடன் சென்று பார்த்தபோது, 2 பேர், பீரோவை உடைத்து கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது. தொடர்ந்து அப்பகுதி மக்கள் உதவியுடன், வீட்டில் இருந்த இருவரையும் பிடித்து, 'வெளுத்து' கட்டினர். பின் மல்லியக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருவரையும் ஒப்படைத்தனர். விசாரணையில் ஏற்காட்டை சேர்ந்த விஜய், 25, கருணாகரன், 42, என தெரிந்தது. காயம் அடைந்திருந்ததால், சேலம் அரசு மருத்துவமனையில், போலீசார் சேர்த்து விசாரிக்கின்றனர்.