உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெரியார் பல்கலை சிறப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

பெரியார் பல்கலை சிறப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை, சிறப்பு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் அறிக்கை:பெரியார் பல்கலை இணைவு பெற்ற கல்லுாரிகளில் படித்த இளநிலை, முதுநிலை மாணவர்களில் சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, வரும் மார்ச், 12 முதல், 30 வரை தேர்வு நடக்க உள்ளது. இச்சிறப்பு தேர்வு கால அட்டவணையை, பல்கலை இணையதளத்தில் பார்வையிடலாம். நுழைவுச்சீட்டை(ஹால் டிக்கெட்) அவரவர் படித்த கல்லுாரி வழியே பெற்றுக்கொள்ளலாம். சிறப்பு தேர்வுகள் அனைத்தும் பெரியார் பல்கலை எதிரே உள்ள பத்மவாணி மகளிர் கல்லுாரியில் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்