| ADDED : மார் 25, 2024 07:12 AM
சேலம் : சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி அறிக்கை:லோக்சபா தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து நிலை ஊழியர்களும் தபால் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் தொகுதியில் வாக்காளராக பதிவாகி வேறு லோக்சபா தொகுதியில் பணி அமர்த்தப்பட்டால் படிவம், '12'ஐ பெற்று தபால் ஓட்டு செலுத்தலாம். அதற்கு, அவர்களது பெயர் பதிவாகி உள்ள சட்டசபை தொகுதி தாலுகா அலுவலகத்தில் தபால் ஓட்டு படிவம், '12'ஐ பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். அத்துடன் வாக்காளர் அடையாள அட்டை நகல், தேர்தல் பணி உத்தரவு நகல் இணைக்க வேண்டும்.ஏப்., 7, 16ல், தபால் ஓட்டு பதிவு செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படும். சேலம் லோக்சபாவில் வாக்காளராக இருந்து அதே தொகுதியில் பணி ஒதுக்கினால் படிவம், '12ஏ' பெற்று பூர்த்தி செய்து வழங்கிய பின், படிவம், '12பி' தேர்தல் பணிச்சான்று வழங்கப்படும். அதை காட்டி, பணியாற்றும் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போடலாம். காத்திருப்பில் உள்ள கூடுதல் பணியாளர்களும், அருகில் உள்ள ஒரு ஓட்டுசாவடியில் ஓட்டுப்போடலாம்.சட்டசபை தொகுதி வாரியாக, தபால் ஓட்டு தொடர்பாக தகவல் பெற மொபைல் எண்களை பயன்படுத்தலாம். அதன்படி கெங்கவல்லி முருகையன், 94439 44154; ஆத்துார் பாலகிருஷ்ணன், 88256 28182; ஏற்காடு வரதராஜன், 96555 39111; சேலம் மேற்கு ரமேஷ் 80726 14110; வடக்கு முத்துராஜ் 94429 87974; தெற்கு வேடியப்பன் 94449 09084; ஓமலுார் விமல்பிரகாஷ், 99526 61266; இடைப்பாடி வாசுகி, 94442 11193; வீரபாண்டி தமிழ்முல்லை, 97892 73103; சங்ககிரி ஜெயக்குமார், 96778 90123; மேட்டூர் செல்வகுமார், 99422 55959.