உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / செத்து மிதந்த மீன்கள் தீவனத்துக்கு கொள்முதல்

செத்து மிதந்த மீன்கள் தீவனத்துக்கு கொள்முதல்

மேட்டூர் : மேட்டூர் அணை அடிவாரம் முதல் செக்கானுார் கதவணை மின் உற்பத்தி நிலையம் வரை காவிரியாற்றில், 0.5 டி.எம்.சி., நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் செக்கானுார் காவிரியாற்றில் ஆக்சிஜன் பற்றாக்குறையால், அரை டன்னுக்கும் மேல் சிறு வகை அரைஞ்சான் மீன்கள் மயங்கி மிதந்தன. அந்த மீன்களை பரிசலில் சென்று சேகரித்த மீனவர்கள் பலர், கோழி தீவனத்துக்கு வியாபாரிகளிடம் விற்றனர். அந்த மீன்களை வியாபாரிகள் கருவாடாக்கி கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் விற்பனை செய்வர். கருவாடுகளை சிறு, சிறு துண்டுகளாக்கி தீவனமாக வழங்குவதால் கோழிகளுக்கு எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக பண்ணை உரிமையாளர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை