உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 4 குழந்தைகளின் தாய் கடத்தல்மெக்கானிக் மீது கணவர் புகார்

4 குழந்தைகளின் தாய் கடத்தல்மெக்கானிக் மீது கணவர் புகார்

மேட்டூர்:கடத்தப்பட்ட தன் மனைவியை மீட்டு தரக்கோரி கணவர் மேச்சேரி போலீஸில் புகார் செய்தார்.மேச்சேரி, பாரக்கல்லூர் காட்டுவளவை சேர்ந்தவர் விவசாயி சண்முகம். இவரது மனைவி ஜெயா (34). தம்பதியருக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளது. கடந்த 24ம் அதிகாலை வீட்டில் எழுந்த சண்முகம், அருகில் தூங்கி கொண்டிருந்த மனைவி ஜெயா, கடைசி மகள் சுகன்யா இருவரும் இல்லாததால் அதிர்ச்சியடைந்தார்.இருவரையும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டு பிடிக்கமுடியவில்லை. பாரக்கல்லூர் அடுத்த செங்காட்டூர் பிரிவு ரோடு பகுதியை சேர்ந்தவர் மெக்கானிக் முகுந்தன். இவர் அப்பகுதியில் டூவீலர் ஒர்க்ஷாப் வைத்துள்ளார். ஜெயா மாயமான அதே நாளில் இருந்து முகுந்தனையும் காணவில்லை.எனவே, தன் மனைவியை மெக்கானிக் முகுந்தன் கடத்தி சென்றிருக்க வாய்ப்புள்ளது. அவரிடம் இருந்து நான்கு பெண் குழந்தைகளின் தாயான என் மனைவியை மீட்டு தர வேண்டும் என சண்முகம் நேற்று மேச்சேரி போலீஸில் புகார் செய்தார் மேச்சேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட ஜெயாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை