உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சங்ககிரி பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம்

சங்ககிரி பள்ளி மாணவர்கள் மாநில அளவில் சிறப்பிடம்

சங்ககிரி, சங்ககிரி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் பிளஸ் 1 படிக்கும், 2 மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில், மாநில அளவில் சிறப்பிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில், பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு, 2022ம் ஆண்டு முதல் தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும், 1,500 ரூபாய் வீதம், 2 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.இந்தாண்டிற்கான திறனாய்வு தேர்வு கடந்த மாதம், 11ல் நடந்தது. 2 லட்சத்து 57 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். தேர்வில் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 25 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் விஜயராகவன் மாநில அளவில் நான்காம் இடத்திலும், முருகன் ஆறாம் இடத்திலும் தேர்ச்சி பெற்றனர்.மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற இரு மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர் பிரபாகரன் ஆகியோருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன், உதவி தலைமை ஆசிரியர் சக்திவேல் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை