சூரமங்கலத்துக்கு உட்பட்ட 14 வார்டுகளை, தலா 7 வார்டுகள் வீதம் பிரித்து, மண்டல உதவி ஆணையர் ரமேஷ்பாபு, உதவி வருவாய் அலுவலர் வசந்தகுமார் ஆகியோர் வேட்பு மனுக்களை பெற்றனர்
நேற்று காலை 10 மணி முதல் உதவி ஆணையர் ரமேஷ்பாபுவிடம் 1வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் தியாகராஜன், சுயேட்சை வேட்பாளர் அருணகிரி, 19வது வார்டு அ.தி.மு.க., வேட்பாளர் அனுராதா, 21வது வார்டு வேட்பாளர் கிருஷ்ணன், சுயேட்சை வேட்பாளர் கோவிந்தராஜ், 3வது வார்டு பா.ம.க., வேட்பாளர் ராஜாமணி ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதேபோல, உதவி வருவாய் அலுவலர் வசந்தகுமாரிடம், அ.தி.மு.க., சார்பில், 27வது வார்டு சசிகலா, 26வது வார்டு ஜமுனாராணி, 25வது வார்டு மாரியப்பன், 23வது வார்டு இந்திரா மற்றும் சுயேட்சை வேட்பாளர் சரவணன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.