தாரமங்கலம் : தாரமங்கலம் செங்குந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள், பொதுத்தேர்வில் அசத்தியுள்ளனர். ஜானி ராக்லண்ட், 587 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். சவுமியா, 579, ஹரீஷ், 578 மதிப்பெண் பெற்று, 2, 3ம் இடங்களை பிடித்தனர்.கணிதத்தில், 4 பேர், கணினி அறிவியலில், 3 பேர், வேதியியல், இயற்பியலில் தலா ஒருவர் என, 9 பேர், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, செங்குந்தர் கல்வி கழக தலைவர் அழகரசன் பாராட்டி பரிசு வழங்கினார். தொடர்ந்து உப தலைவர் கந்தசாமி, செயலர் அமிர்தலிங்கம், இணை செயலர் கலைச்செல்வன், இயக்குனர்கள், உறுப்பினர்கள், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்களை பாராட்டினர்.