மேலும் செய்திகள்
மாசு கட்டுப்பாடு தின விழா
23 hour(s) ago
சுகவனேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிேஷகம்
23 hour(s) ago
உள்ளாட்சித்துறை ஊழியர்கள் கைது
23 hour(s) ago
சேலம்: சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தில் ஜவுளி பூங்கா அமைய உள்ள இடத்தை, மா.கம்யூ. மாநில செயலர் சண்முகம் நேற்று பார்வையிட்டு, மக்களிடம் விசாரித்தார். தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: ஜவுளி பூங்கா பெயரில், சாயப்பட்டறைகள் அமைக்க முயற்சி நடக்கிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீராதாரம், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என, மக்கள் அச்சப்படுகின்றனர். அவர்களின் அச்சத்தை போக்குவது அரசின் கடமை. மக்கள் ஒத்துழைப்புடன் இத்தகைய திட்டங்களை செயல்படுத்துவது தான் சிறப்பு. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் தமிழக அரசு, கனிம வளங்கள் நிறைந்த இப்பகுதியில் சாயப்பட்டறைகள் அமைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
23 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago