உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / எம்.பில்., மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு அறிவிப்பு

எம்.பில்., மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு அறிவிப்பு

ஓமலுார், பெரியார் பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், எம்.பில்., மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் அறிக்கை:சேலம் பெரியார் பல்கலை இணைவு பெற்ற கல்லுாரிகளில் முழு, பகுதி நேர ஆய்வியல் நிறைஞர் படிப்புக்கான சிறப்பு தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, ஏப்., 1 முதல், 5 வரை எழுத்துத்தேர்வு, ஆய்வேடுகளை சமர்ப்பித்தவர்களுக்கு, ஏப்., 15 முதல் 19 வரை வாய்மொழி தேர்வு, ஆன்லைனில் நடக்க உள்ளது. இச்சிறப்பு தேர்வு நுழைவுச்சீட்டை, மாணவர்கள் படித்த கல்லுாரிகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இச்சிறப்பு எழுத்து தேர்வு அனைத்தும், பெரியார் பல்கலை எதிரே உள்ள பத்மவாணி மகளிர் கல்லுாரியில் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி