உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெண்ணை கொன்று தாலியை பறித்த கும்பலுக்கு வலை

பெண்ணை கொன்று தாலியை பறித்த கும்பலுக்கு வலை

நங்கவள்ளி:சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே நரிக்கல்லுாரை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன், 55. இவரது மனைவி இந்திராணி, 45. இவர்களது மகன் வெளியூரில் படிக்கிறார். மகள் திருமணமாகி, கோவையில் வசிக்கிறார். ஈஸ்வரன், இந்திராணி ஆகியோர், அங்குள்ள தென்னந்தோப்பு நடுவே தனி வீட்டில்வசித்தனர்.வேலை நிமித்தமாக நேற்று காலை ஈஸ்வரன் வெளியே சென்றுவிட்டு, மதியம் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டுக்கு வெளியே தலை சிதைந்த நிலையில் இந்திராணி, கொலை செய்யப்பட்டு கிடந்தார்.நங்கவள்ளி போலீசார், ஓமலுார் டி.எஸ்.பி., சங்கீதா உள்ளிட்டோர் அங்கு வந்து விசாரித்தனர்.போலீசார் கூறுகையில், 'வீட்டில் தனியே இருந்த இந்திராணி தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த தாலிக்கொடியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்த நகை, பணம் திருடு போனதா என்றும் விசாரணை நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை