உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விபத்தில் கூலித்தொழிலாளி பலி

விபத்தில் கூலித்தொழிலாளி பலி

மேட்டூர்:கொளத்துார், மூலக்காடு ஊராட்சி ஜோகிமானுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி கார்த்தி, 32. இவருக்கு திருமணம் ஆகவில்லை. நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, ஹெல்மட் அணியாமல், நண்பரின் 'பேசினோ' மொபட்டில் மூலக்காட்டில் இருந்து கொளத்துார் நோக்கி சென்றுகொண்டிருந்தார். மூலக்காடு அடுத்த விராலிக்காடு அருகே சென்றபோது, கொளத்துாரில் இருந்து மேட்டூர் நோக்கி வாழைத்தார் ஏற்றிவந்த சரக்கு வேன், மொபட் மீது மோதியது. இதில் கார்த்தி சம்பவ இடத்தில் பலியானார். கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !