ஓமலுார், காடையாம்பட்டி, காருவள்ளி சின்னதிருப்பதி வெங்கட்ரமணர் கோவிலில், வரும் டிச., 1ல் கும்பாபி ேஷகம் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. காலையில், கோவிலில் இருந்து பட்டாச்சாரியார்கள், தீர்த்தக்குடங்களை எடுத்து அடிவாரத்தை சுற்றி மீண்டும் மலைக்கோவிலுக்கு வந்தனர். முன்னதாக பசுமாடுகள், குதிரைகள், மேள, தாளம் முழங்க, பக்தர்கள் முளைப்பாரி எடுத்து பங்கேற்றனர். செயலர் அலுவலர் சரண்யா, திருப்பணிக்குழுவினரும், ஊர்வலத்தில் பங்கேற்றனர். மாலையில் மூலவர், பரிவார மூர்த்திகளுக்கு மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று முளைப்பாரி இடுதல், மாலையில் முதல்கால யாக வேள்வி தொடங்குகிறது.சித்தேஸ்வரன் கோவில்சங்ககிரி, காவேரிப்பட்டி, மோட்டூர் கணக்கங்காடு சித்தேஸ்வரன், பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ளது. இதை முன்னிட்டு நேற்று கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீரை எடுத்துக்கொண்டு, காவேரிப்பட்டி, மோட்டூர் வழியே கோவிலை அடைந்தனர்.இன்று முதல்கால யாக சாலை பூஜை, நாளை அதிகாலை, 2ம் கால யாக சாலை பூஜையை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.பத்மகாளியம்மன்தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலின் உபகோவிலான பத்ரகாளியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. நேற்று காலை சயனாதி வாசம், தேவி கண் திறத்தல், எண் வகை மருந்து சாற்றப்பட்டு, கோபுர கலசம் வைக்கப்பட்டது. மாலை விக்னேஷ்வர பூஜை, அங்குரார்பணம் செய்து முதல்கால யாகவேள்வி நடந்தது.