உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வேட்ராய பெருமாள் கோவிலில் தெப்ப தேரோட்டம் கோலாகலம்

வேட்ராய பெருமாள் கோவிலில் தெப்ப தேரோட்டம் கோலாகலம்

தாரமங்கலம்: தாரமங்கலம் அருகே மானத்தாளில், சோரகை என அழைக்கப்படும் சிறு மலை உச்சியில், பழமையான வேட்ராய பெருமாள் கோவில் உள்ளது. ஏகாதசியையொட்டி நேற்று முன்தினம், அக்கோவில் வீட்டில் இருந்து வேட்ராய பெருமாள் சுவாமி, மலைக்கு கொண்டு செல்லப்பட்டு பூஜை நடந்தது. நேற்று துவாதசி யால், கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடந்தது.தொடர்ந்து மலை உச்சியில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேட்ராய பெருமாள், மேளம், தாளம் முழங்க கீழே கொண்டு வரப்பட்டது. மானத்தாள் ஏரிக்கரையில் உள்ள சஞ்சீவராயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர். அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தெப்பத்தில், வேட்ராய பெருமாள், சிறு தெப்பத்தில் சஞ்சீவராயர் சுவாமியை எழுந்தருளச்செய்தனர். தொடர்ந்து பூஜை செய்து, மானத்தாள் ஏரியில், தெப்ப தேரோட்டம் நடந்தது. அதை ஏராளமான பக்தர்கள், ஏரிக்கரையில் சுற்றி நின்று தரிசனம் செய்தனர். தொளசம்பட்டி போலீசார், ஓமலுார் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி