உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மனைவியின் அண்ணனை தாக்கிய தொழிலாளி கைது

மனைவியின் அண்ணனை தாக்கிய தொழிலாளி கைது

சேலம், சேலம், கிச்சிப்பாளையம், கஸ்துாரிபாய் தெருவை சேர்ந்த சங்கர் மகன் சாமுவேல், 20; மேளம் அடிக்கும் தொழிலாளி. இவரது காதல் மனைவி நந்தினி, 20; தலை பிரசவத்துக்கு, அன்னதானப்பட்டியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார். கடந்த, 18ல் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. 26ல், மனைவி, குழந்தையை பார்க்க சாமுவேல் சென்றார்.அப்போது, நந்தினியின் அண்ணன் சரவணன், சாமுவேல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த சாமுவேல், சரமாரியாக தாக்கியதில் சரவணன் படுகாயமடைந்தார். அவரது புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, சாமுவேலை கைது செய்தனர்.'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி