உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / உலக குளுக்கோமா வார விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக குளுக்கோமா வார விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேலம்:குளுக்கோமா நோயால் கண் பார்வை பாதிக்கப்படுவதால், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மார்ச்சில், உலக குளுக்கோமா வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு, சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின், கண் ஒளியியல் பிரிவு, பல்கலை வேந்தர் கணேசன் வழிகாட்டுதல்படி விழிப்புணர்வு நிகழ்ச்சியை, சேலம், அஸ்தம்பட்டி மற்றும் பேர்லண்ட்ஸில் நடத்தியது.துறை டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சேலம் மாநகர போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன்(ஆயுதப்படை) தொடங்கி வைத்தார். கண் ஒளியியல் பிரிவு மாணவ, மாணவியர், குளுக்கோமா நோய், அதன் அறிகுறி, தடுக்கும் வழிமுறை, ஆபத்து காரணிகள், மருத்துவ ஆலோசனை பெற வேண்டிய அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துரைத்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதற்கான ஏற்பாட்டை, பேராசிரியை தமிழ்சுடர், உதவி பேராசிரியர்கள் சவுந்தர்யா, மெய்பிரபு, ராம்பிரசாத், திவ்யா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை