உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் மறைமாவட்ட வெள்ளிவிழா ஆண்டு துவக்கம்

சிவகங்கையில் மறைமாவட்ட வெள்ளிவிழா ஆண்டு துவக்கம்

சிவகங்கை:''ஒவ்வொருவரின் வீடு, மனிதனின் மனங்களில் சமாதானம் நிலவ வேண்டும்,'' என, சிவகங்கை மறை மாவட்ட பிஷப் சூசைமாணிக்கம் பேசினார்.மதுரை உயர் மறை மாவட்டத்தில் இருந்து சிவகங்கை மறை மாவட்டம் 1987 ஆக.,30ல் தோன்றியது. இம்மறை மாவட்டம் தோன்றி 24 ஆண்டு முடிந்து, 25வது ஆண்டு துவங்கியுள்ளது. இதற்கான வெள்ளிவிழா ஆண்டு துவக்க விழா, சிவகங்கை தூய அலங்கார அன்னை ஆலயத்தில் நடந்தது.சிவகங்கை மறைமாவட்ட பிஷப் சூசைமாணிக்கம் பேசுகையில்,'' ஒவ்வொருவரின் வீடு, மனிதன் மனங்களில் சமாதானம் நிலவவேண்டும். ஒவ்வொருவரிடமும் ஆன்மிக புத்தொளிர்ச்சி தோன்றவேண்டும். உறவு நிலைகளில் சகோதரத்துவம், சமத்துவம் நிலவினால், நாடு அமைதியாக இருக்கும். வெள்ளி விழா ஆண்டு நிறைவு நாள் விழா, 2012ம் ஆண்டு அக்., முதல் ஞாயிறன்று ராமநாதபுரம் மாவட்டம் ஓரியூர் தூய அருளானந்தர் ஆலயத்தில் நடைபெறும். இதில்,மாநில அளவில் இருந்து பேராயர்கள், ஆயர்கள், பங்கு தந்தைகள் பங்கேற்கின்றனர்,'' என்றார்.வெள்ளி விழா ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி, ஆன்மிக உரை நடந்தது. மதுரை உயர்மறைமாவட்ட முதன்மைகுரு ஜோசப் செல்வராஜ் மறையுரையாற்றினார். சிவகங்கை மறைமாவட்ட முதன்மைகுரு ஜோசப்லூர்துராஜா, பொருளாளர் அருள்ஜோசப், வியான்னி அருட்பணி மைய இயக்குனர் அருள்ஆனந்த், சிவகங்கை பங்கு தந்தை சேவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை