உள்ளூர் செய்திகள்

ஆடி விழா நிறைவு

தேவகோட்டை,- தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆடித்திருவிழா ஜூலை 21ல் மேடை அமைத்தல், மறுநாள் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் பொங்கல் வைக்கப்பட்டது. ஜூலை 30 ல் புள்ளி பொங்கலன்று பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பால்குடம், பூச்சொரிதல் பூஜை நடந்தது. நேற்று முன்தினம் மூன்றாவது பொங்கல் வைக்கப்பட்டு பூஜை நடந்தன. 15 நாட்கள் பலி பீடத்திற்கு காலை மாலை சிறப்பு அபிஷேகம், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நிறைவு நாளான நேற்று பூஜையை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கோட்டையம்மன், மற்றும் தென்னம்பாலை பொருட்கள் கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு அருகில் உள்ள ஊருணியில் பூஜை செய்து அம்மனை பூஜாரிகள் நீரில் வைத்தனர். இதனை தொடர்ந்து ஆடித்திருவிழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி