உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோயில்களில் ஆடி பவுர்ணமி பூஜை

கோயில்களில் ஆடி பவுர்ணமி பூஜை

தேவகோட்டை: தேவகோட்டையில் பவுர்ணமியை முன்னிட்டு கல்லாம்பிரம்பு காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.ஆடி பவுர்ணமி என்பதால் காளியம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டும், விநாயகர், முருகன் உட்பட பரிவார சுவாமிகளுக்கு வெள்ளி அலங்காரம் செய்யப்பட்டும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.* நித்திய கல்யாணிபுரம் சவுபாக்ய துர்க்கை அம்மன் கோவிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.* பட்டுக்குருக்கள் நகர் ஸ்வர்ண பைரவர் கோவிலில் ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் அலங்காரம் பூஜைகள் நடைபெற்றன.ராம்நகர் ராஜநாகேஸ்வரி அம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவில், அபிராமி அம்மன் கோவில் உட்பட அம்மன் கோவில்களில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது.

மானாமதுரை

தாயமங்கலம் ரோட்டில் அலங்காரகுளம் அருகே உள்ள மயூரநாதர் பாம்பன் குமரகுருதாச கோயிலில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர், சந்தனம், குங்குமம், திரவியம்,உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. மதியம் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் மானாமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பாம்பன் சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !