உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தி.மு.க., பிரமுகர் மீது நடவடிக்கை; சிங்கம்புணரியில் ஆர்ப்பாட்டம்

தி.மு.க., பிரமுகர் மீது நடவடிக்கை; சிங்கம்புணரியில் ஆர்ப்பாட்டம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பருகுப்பட்டியை சேர்ந்தவர் தாண்டவன். தி.மு.க.,பிரமுகரான இவர், தனது மனைவி தேவிகா பெயரில் ஒன்றியத்தில் கான்ட்ராக்ட் வேலை எடுத்து செய்து வருகிறார்.வேலை முடித்த சில பணிகளுக்கு இன்னும் பணம் வராததால், ஏப். 24ம் தேதி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்ற தாண்டவன் அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.அங்கிருந்த கணக்கர் செல்வராணியை திட்டியுள்ளார்.தாண்டவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், திருப்புத்துார் வட்டாரத் தலைவர் சிவா, மாவட்ட தணிக்கையாளர் சேக அப்துல்லா, மாவட்ட இணைச் செயலாளர் மலர்விழி, துரைராஜ், இந்துமதி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி