உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஏ.வேலங்குடியில் ஆக.22ல் மக்களுடன் முதல்வர் முகாம்

ஏ.வேலங்குடியில் ஆக.22ல் மக்களுடன் முதல்வர் முகாம்

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் ஏ.வேலங்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ஆக.22ல் நடைபெறுகிறது.திருப்புத்துார் ஒன்றியம் வையகளத்துார், வஞ்சினிப்பட்டி, ஏ.வேலங்குடி, செவ்வூர், எ.தெக்கூர், பூலாங்குறிச்சி ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமங்களுக்கு ஏ.வேலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் முகாம் நடைபெறுகிறது. காலை 10:00 மணிக்கு துவங்கி மதியம் 3:00 மணி வரை முகாம் நடைபெறும். வருவாய், வளர்ச்சித்துறை, கூட்டுறவு, காவல்துறை உள்ளிட்ட 13 துறையினர் பங்கேற்கின்றனர். கிராமத்தினர் பல் துறை சார்ந்த தங்கள் கோரிக்கை மனுக்களை உரிய ஆவணங்களை இணைத்து வழங்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி