உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் ஆக்கிரமிப்பு அகற்றம்  காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு 

சிவகங்கையில் ஆக்கிரமிப்பு அகற்றம்  காற்றில் பறந்த கலெக்டர் உத்தரவு 

சிவகங்கை : சிவகங்கை அம்மா உணவகத்தை சுற்றி வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றிய சில மணி நேரத்திற்குள் மீண்டும் அதே இடத்தில் கடைகள்ஆக்கிரமித்து விட்டதால்,கலெக்டர் உத்தரவு காற்றில் பறந்துள்ளது. சிவகங்கை வாரச்சந்தை ரோட்டில் உள்ள அம்மா உணவகத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவரை ஆக்கிரமித்து கடைகள் முளைத்துள்ளன. இந்த ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற வேண்டும் என சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித், நகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். நேற்று காலை 9:45 மணிக்கு நகராட்சி கமிஷனர் கிருஷ்ணா ராம் தலைமையில் அலுவலர்கள் அம்மா உணவகத்தை காம்பவுண்ட் சுவரை சுற்றி ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்றினர். அங்கிருந்த பந்தல், பெட்டிகளை அகற்றி நகராட்சி லாரியில் ஏற்றினர். அவற்றை அப்படியே நகராட்சி நிர்வாகம் கைப்பற்றாமல், மீண்டும் அதே கடைக்காரரிடம் ஒப்படைத்தனர். ஆக்கிரமிப்பு அகற்றிய சில மணி நேரத்திற்குள் மீண்டும் அம்மா உணவகத்தை சுற்றி, அதே கடைகள் ஆக்கிரமித்து விட்டன.

ஆக்கிரமிப்பு கடை அகற்றப்படும்

நகராட்சி கமிஷனர் கிருஷ்ணா ராம் கூறியதாவது: அம்மா உணவகத்தை சுற்றி அமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டபடி, நேற்று காலை அகற்றிவிட்டோம். மீண்டும் அக்கடைகள் துவக்கியது குறித்து எனக்கு தெரியாது. இது குறித்து விசாரித்து கண்டிப்பாக அம்மா உணவகத்தை சுற்றி ஆக்கிரமித்துள்ள கடைகள் அகற்றப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை